More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
Feb 26
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.



உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மூன்றாவது நாளாக இன்றும் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.உக்ரைனில்  பதற்றத்தை தணிக்க வேண்டுமென்றும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்  இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன .இதையடுத்து தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை ரஷ்யா தோல்வியடைய செய்தது. 



இதனிடையே இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி ரோமன் தற்போதைய சூழல்  ஏற்படுவதற்கான காரணத்தை இந்தியா ஆழமாக புரிந்து கொண்டுள்ளது. எனவே பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.   அதேபோல்  இந்தியாவின் ஆதரவை உக்ரைனும் எதிர்ப்பார்த்த சூழலில் இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr02

அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த

May09

ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்

Mar01

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி

Jul22

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்

Jun09

ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Mar04

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு  பொ

Mar11

உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப

Feb05

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய ச

Aug11

நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத

Jul25

சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப

Jul16

பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ

Feb15

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நா

May21

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க

Mar03

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:30 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:30 pm )
Testing centres