உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ரஷ்யாவிடம் சரணடைய மறுத்து உயிர் துறந்த 13 உக்ரைன் வீரர்களுக்கும் ‘உக்ரைன் வீரர்கள்’ என்ற விருதினை அறிவிக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருங்கடலில் உள்ள தீவொன்றை காப்பாற்றுவதற்கான போராட்டத்தின் போது சரணடைய மறுத்து உயிர் துறந்த உக்ரைன் வீரர்களுக்கே இவ்வாறு விருது வழங்கப்படவுள்ளது.
உக்ரைன் கருங்கடலில் உள்ள தீவொன்றை பாதுகாப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படைவீரர்கள் ரஷ்யாவின் விமான தாக்குதலையும்,கடற்படை தாக்குதலையும் எதிர்கொண்டுள்ளனர்.
ரஷ்ய யுத்த கப்பலில் இருந்து சரணடையுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த அவர்கள் போரிட்டு உயிரிழந்துள்ளனர்.
கிரிமியாவிற்கு 186 மைல் தொலைவில் உள்ள 40 ஏக்கர் ஸ்னேக் தீவில் உக்ரைனின் 13 எல்லை காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த தீவை நோக்கி வந்த ரஷ்ய கடற்படை கப்பலிற்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ரஷ்ய கப்பலில் இருந்து உத்தரவு வெளியாகியுள்ளது.
இது யுத்தக்கப்பல், இது ரஷ்யாவின் யுத்தக்கப்பல், இரத்தக்களறியையும் தேவையற்ற உயிரிழப்பையும் தவிர்ப்பதற்காக ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்! இல்லாவிட்டால் தாக்கப்படுவீர்கள் என ரஷ்ய கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் உக்ரைன் தரப்பிலிருந்து பதில் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ஊடகமொன்று உட்பட பல ஊடகங்கள் இந்த குறித்த ஒலிநாடாவை வெளியிட்டு வருகின்றது.