மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நினைத்துவிட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.
உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புடின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது. முன்னதாக, சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம்.
அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர்.
புடினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புடின் நிராகரித்துவிட்டார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார் என எச்சரித்துள்ளார்.
உக்ரைனுடனான தெற்கு எல்லையில் “பெலாரஸ்” தனது படைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் இது பத்து மடங்கு வரை உயரும் என்று ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்தார்.
இந்த நடவடிக்கையானது பெலாரஸுக்கு எதிரான எந்தவொரு ஆத்திரமூட்டல் மற்றும் இராணுவ நடவடிக்கையையும் நிறுத்துவதற்கு மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட படை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.