இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரொருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
