வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்து நீர்கொழும்பில் தங்கியிருந்த தம்பதியினர் காலிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த முச்சக்கரவண்டி பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்துள்ளது.
பொஹத்தரமுல்ல தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள எதிர் பாதையில் குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், செங்கல் குவியலை இடித்து, கடையின் வாயிலை சேதப்படுத்தியது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் கடைக்கு 20,000 ரூபாய்க்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இதன்படி கடை உரிமையாளரின் தயவில் இரு தரப்பினரும் உடன்படிக்கை செய்து வெளிநாட்டு தம்பதியினரின் வசமிருந்த 12,000 ரூபா நட்டத்தை செலுத்தியதையடுத்து, பொலிஸ் முறைப்பாடு எதுவுமின்றி தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.
குறித்த விபத்தின் போது வெளிநாட்டு பெண்ணால் முச்சக்கரவண்டி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
