இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, மார்ச் 4ம் திகத மொஹாலி மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிமுதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
2வது நாள் தொடரந்து விளையாடி இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் (33), ரோகித் சர்மா (29), விஹாரி (58), கோலி (45), பந்த் (96), ஸ்ரேயாஸ் ஐயர் (27), அஸ்வின் (61), ஜெயந்த் யாதவ் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஐடேஜா 175 ரன்களுடனும், முகமது ஷமி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் பந்து வீச்சில் லக்மல், விஷ்வா பெர்னாண்டோ, எல்புல்தெனிய தலா 2விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
3வது நாள் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் பந்து வீச்சில் ஐடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து, இந்திய பலோ-ஆன் கொடுக்க, இலங்கை அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
எனினும், அஸ்வின்-ஐடேஜா சுழலை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி.
இதன் மூலம் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அபார வெற்றிப்பெற்றது.
2வது இன்னிங்ஸில் இந்திய தரப்பில் அஸ்வில், ஐடேஜா தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்திய நட்சத்திர வீரர் கோலிக்கு இது 100வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 175 குவித்த ஜடேஜா, பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ம் திகத பகல்-இரவு போட்டியாக பெங்களூருவில் நடைபெறவிருக்கிறது.