உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய உளவு அமைப்பின் இரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உக்ரைனியர்களின் மன உறுதியை சிதைக்கும் வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கடுமையான சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது 10வது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகின்றது.
இந்நிலையில், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
