More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!
அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!
Mar 06
அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள்.



மாங்காய், எலுமிச்சை, நார்த்தை, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன், கோழி என விதவிதமான வகைகளில் ஊறுகாய் தயார் செய்யப்படுகிறது.



அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஊறுகாய்க்கு கூடுதல் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.



ஊறுகாயில் சேர்க்கப்படும் பொருட்கள் நொதித்தல் முறையில் ஒன்றோடு ஒன்று கலந்து ருசி சேர்க்கின்றன.



இத்தகைய நொதித்தல் தன்மை குடலுக்கு ஆரோக்கியமானது.



எனினும் ஊறுகாயில் உப்பும், எண்ணெய்யும் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.



அவை ஊறுகாயில் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக கலக்கப்படுகின்றன.



ஆனாலும் உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.



பொதுவாகவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் இதயத்திற்கு கேடு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.



எண்ணெய்யில் ஹைட்ரோஜனேட் உள்ளிட்ட மோசமான கொழுப்புகளும் கலந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.



‘‘எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு இதய நோய், உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பும் உடலுக்கு தீங்குவிளைவிக்கும்.



உயர் ரத்த அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.



மேலும் ஊறுகாயில் கலக்கப்படும் மசாலா பொருட்கள் செரிமான அமைப்பை எரிச்சலூட்டும்.



தரமில்லாத எண்ணெய் ஊறுகாயில் கலக்கப்பட்டால் அதிலிருக்கும் டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்’’ என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா.



உடலுக்கு ஆரோக் கியம் சேர்க்கும் ஊறுகாயை தயாரிக்கும் விதத்தையும் விளக்குகிறார்.



‘‘கடுகு எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து ஊறுகாய் தயார் செய்தால் அது குடலுக்கு நலம் சேர்க்கும்.



ஊறுகாய் தயாரிப்புக்கு சேர்க்கப்படும் பொருட்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.



நொதித்தலும் சரியான வழிமுறையில் நடைபெற வேண்டும். எனினும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும்.அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும்’’ என்கிறார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எà

Feb06

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்à

May04

பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேறà¯

Mar22

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு

Feb14

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்à

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறைà

Mar06

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருசà

Feb07

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையà

Oct21

கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து

Feb02

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுகà¯

Feb22

முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியுà®

Oct23

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில் à®

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்களà

Feb17

மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவà¯

Feb10

கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:19 am )
Testing centres