ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது.
பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவிலும், அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இதுதொடர்பில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு எதிரான விரோதத்தைத் தொடர்ந்து, உலக வங்கி குழு ரஷ்யா மற்றும் பெலாரசில் உள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கண்டனம் வெளியிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி
ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த