உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மொத்தம் 600 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 21ஆம் நூற்றாண்டு இதுவரை கண்டிராத உக்கிர போராக மாறி வருகிறது. இராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு ரஷ்யா களம் இறங்கினாலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.
இராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷ்யா தேடிக்கொண்டுள்ளது.
இந்த 11 நாள் போரில் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி மற்றும் மால்டோவா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12ஆவது நாளாக எட்டியுள்ள நிலையில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ், சுமி மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷ்யா.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷியா மொத்தம் 600 ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்குள் அதன் போர் சக்தியில் சுமார் 95 சதவீதத்தை செலவு செய்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளி
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடு
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்ல
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற