ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் ஐ. நா மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் பேசிய அவர்,
தற்கொலை குண்டுத் தாக்குதலில் 82 குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததகவும் கூறினார்.
தற்கொலை குண்டு தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதும் இந்த படுகொலையில் பெரும் அரசியல் சதித்திட்டம் இருப்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.
அத்தோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதற்கும், பொறுப்பு கூறவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை அடக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனவே சாட்சிய சேகரிப்பு நடவடிக்கையோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிய பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என பேரவையையும் அதன் உறுப்பு நாடுகளையும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீà®
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உà
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலà
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடஙà
போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலà®
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுà
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்à®
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மà
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அ
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளரà¯
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உகà
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷà
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்றà
