ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன.
உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிப் பதிவாகியுள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன.
தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட, அந்த விமானம் தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறி தரையில் விழுவதையும், அதைக் கண்ட உக்ரைன் வீரர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள காணொளியில் காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், கார்க்கிவ் நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமரா ஒன்றிலும், ரஷ்ய விமானம் ஒன்று இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்படும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கார்க்கிவ் பகுதி கவர்னரான ஆல்யெக் சினிகுபோவ், ரஷ்யப் போர் விமானம் கார்க்கிவ் விமான பாதுகாப்புப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
அத்துடன், கார்க்கிவ் நகரில் சுற்றிச் சுற்றி வந்து, தொடர்ந்து குண்டு வீசிக்கொண்டிருந்த ஐந்து முதல் ஏழு ரஷ்ய விமானங்களில், இந்த விமானமும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி