More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • குண்டுமழைக்கு மத்தியில் அரங்கேறிய இளம்பெண்ணின் இசைமழை:
குண்டுமழைக்கு மத்தியில் அரங்கேறிய இளம்பெண்ணின் இசைமழை:
Mar 08
குண்டுமழைக்கு மத்தியில் அரங்கேறிய இளம்பெண்ணின் இசைமழை:

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு அவசர அவசரமாக வெளியேறுவதற்காக லிவிவ் நகர ரயில்நிலையத்தில் கவலையுடன் காத்திருக்கும் பொதுமக்களின் மத்தியில் இளம்பெண் ஒருவரின் பியானோ மெல்லிசை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



உலக அளவில் மிகவும் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின், டைட்டானிக் திரைப்படத்தின் கப்பல் மூழ்கும் இறுதிக்காட்சிகளில், அந்த கப்பலில் பயணித்த இசைக்குழு ஒன்று வாழ்க்கையின் இறுதிநிமிடங்களில் கூட மனிதனுக்கு நம்பிக்கையை தெளிக்கும் மெல்லிசை இசைத்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற செய்திருந்தார். 



அதைப்போன்றே தற்போது நிஜத்திலும் அத்தகைய நம்பிக்கை ஊட்டும் காட்சிகள் உக்ரைனில் போர் பதற்றத்திற்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.



உக்ரைனில் ரஷ்யா தனது அதிகாரப்பூர்வமான தாக்குதலை அறிவித்து அந்தநாட்டின் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவருகிறது.



இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி சுமார் 1.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அகதிகளாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி  அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தெரிவித்திருந்தது.



இந்த நிலையில், இதைப்போன்ற பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, உயிர் தப்பிப்பிழைத்து ஓடுவதற்காக லிவிவ் நகரின் ரயில்நிலையத்தில் குவிந்த குழப்பமும், பயமும் நிறைந்த மக்கள் மத்தியில் இளம்பெண் ஒருவர் பியானோ இசைக்கருவி மூலம் “What a Wonderful World.”என்ற மெல்லிசையை இசைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



இத்தகைய போர் பதற்றம் நிறைந்த குழப்பமான, உயிர் தப்பிப்பிழைக்கும் சூழ்நிலையிலும், இந்த இளம் பெண்ணின் இசைக்கச்சேரி அங்குள்ள மக்களின் வாழ்வியல் நம்பிக்கையில் புத்துயிர்ப்பு வழங்கி, கண்களில் சொட்ட வைத்துள்ளது.



மேலும் இளம்பெண்ணின் இந்த இசை கச்சேரி சமூகவலைத்தளங்களில் பரவி 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு

Mar04

   இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப

Jan19

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு

Mar05

கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச

Mar21

மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Mar03

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Mar11

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத

Mar08

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Aug09

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப

Feb03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (16:50 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (16:50 pm )
Testing centres