இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டமையும் வரவேற்றுள்ளது.
இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க இலங்கையில் பயங்கவராத தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம் இவற்றுள் முக்கியமானது என்றும் அமெரிக்கா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்த, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை திறம்பட, சுதந்திரமாக, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அதேசமயம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து வெளியேறிமை மற்றும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்றுள்ளது.
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை