ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து சணல் குமார் சசிதரன் கூறும்போது, “நான் மஞ்சு வாரியரை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனாலும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின்னர் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் நான் மஞ்சுவாரியரிடம் பேச முற்பட்டபோது, வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விட்டனர். மஞ்சு வாரியரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சுவாரியரை பிளாக் மெயில் செய்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மலையாள நடிகைகள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதற்கு மஞ்சு வாரியர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு கால
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
தல அஜித் நடிப்பில் வலிமை படம் இன்னும் இரண்டு நாட்களில
வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.
ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக
மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு
