இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்களில் துப்பாக்கியால் சுடுவதையும் பொருட்படுத்தாமல், காயம்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் சென்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த 15 வயது சிறுமியின் துணிவை இணையவாசிகள் தற்போது கொண்டாடி வருகின்றனர். உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் ஷெல் தாக்குதல் வாகன சாரதியை பலத்த காயப்படுத்தியதால், 15 வயதேயான சிறுமி அப்போது சாரதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முனைப்பில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணியுடன் குறித்த சிறுமியும் சாரதியும் தங்கள் வாகனத்தில் வேகமாக விரைந்துள்ளனர்.
அப்போது இரண்டாவது முறையும் அந்த வாகனம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ரஷ்ய துருப்புகளால் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதியின் ஊடாக சுமார் 20 மைல்கள் தொலைவு பயணப்பட்டு அவர் மருத்துவமனை ஒன்றை நாடியுள்ளது பின்னர் தெரியவந்தது.
ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
