அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
ஒரு வார காலத்தில் புதிதாக 35 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பரவல் 12 சதவீதமும், இறப்பு 25 சதவீதமும் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் தொற்று பரவல் 14 வீதமும், ஆபிரிக்காவில் 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேற்கு பசுபிக், பகுதிகளில் நிலையாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியதாவது, நவம்பரில் முதன்முதலாக ஒமைக்ரோனை கண்டறிந்த தென் ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உரு மாறிய கொரோனா மறுபடியும் எழுச்சி பெறுகிறது.
பெரும்பாலான மக்கள் தொகைக்கு நோய் எதிர்ப்புசக்தி கிடைத்துள்ளதால், ஒப்பீட்டளவில் அதிகளவில் ஆஸ்பத்திரி சேர்க்கைகள், இறப்புகள் தடுக்கப்படுகின்றன. குறைவான தடுப்பூசி பயன்பாடு உள்ள நாடுகளில் இதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஏழைநாடுகளில் மொத்தமே 16 சதவீதத்தினர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
ஆப்கானிஸ்தான் நாட்டை
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண் உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக
