More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்
நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்
May 15
நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திய வங்கியின் கஜானா நிறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கான வேலைத்திட்டங்களை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார்.



புதிய பிரதமராக பதவியேற்ற ரணில், பல நாட்டு தூதுவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன.



நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கைக்கு பெருமளவு கடனுதவியை வழங்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்



 



இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிய வருகிறது.



தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளும் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் இலங்கையின் கைகளை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இதேவேளை இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஏற்கனவே உடன்பட்ட கடன் தொகையை விட பல மடங்கு அதிகமான வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளன.



ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சார்பில் கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நிறைந்து வரும் இலங்கையின் கஜானா! டொலர்களை கொட்டும் வெளிநாடுகள்



 



இவ்வாறான நிலை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரித்து ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முன்னர் இலங்கை கையிருப்பில் இருந்த டொலர்களின் மட்டத்திற்கு உயர்ந்து விடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



இவ்வாறான சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம

Apr05


கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு

Mar16

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Jun10

கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ

Apr07

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந

Feb02

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற

Jun09

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Apr03

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச

Aug04

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த

Jun20

காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற

May20

பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி

Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

Jun20

புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (10:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (10:15 am )
Testing centres