தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் வீட்டு முன் சீரியல் நடிகை ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர், சமீபத்தில் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தியநிலையில், பின்பு தான் மன அழுத்தத்தில் இருந்ததாக கண்ணீருடன் காணொளியினை வெளியிட்டார்.
பின்பு நடிகர் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்' போல என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.இதனை அவதானித்த ரசிகர்கள் சிம்புவை திருமணம் செய்துகொள்ள கருத்து தெரிவித்த போது, தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக பதில் அளித்தார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஸ்ரீநிதி கூறுகையில், எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்!...