சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில் கசிந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஓடியோவில், 1.40 லட்சம் இராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஷ்யா பாணியில் தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் கடந்த 1949ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
மட்டுமின்றி, தேவையெனில் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5 தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
