கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலன்ன புதிய நகரில் வசித்து வரும் இரண்டு இளைஞர்களுக்கு சொந்தமான சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என கொலன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் திஸ்ஸமஹாராம லுணுகம்வெஹெர பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்பிலிப்பிட்டிய பணாமுர, மொனராகலை நக்கல மற்றும் அரலங்கவில பகுதிகளை சேர்ந்த சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் இராணுவத்தில் கடமையாற்றி வருவதுடன் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில் தப்பியோடியவர் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கொலன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
