இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப் போயுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருளை சீனா அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
எனோக்சபரின் சோடியம் எனப்படும் இந்த மருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானதாக காணப்படும் போதும் தற்போதைக்கு இலங்கையில் எந்தவொரு இடத்திலும் கிடைக்காத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பத்து இலட்சம் சீன யுவான்கள் பெறுமதியான இந்த மருந்துகள் அடங்கிய சிரிஞ்சுகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன் இலங்கைப் பெறுமதி 54 கோடி ரூபாவாகும். இந்த அன்பளிப்புத் திட்டத்தின் கீழ் சீன அரசாங்கத்தினால் 512,640 சிரிஞ்சுகள் எனொக்சபரின் சோடியம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் ஆறுமாத கால மருந்துத் தேவையை அதனைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இன்றைய தினம் 256,320 சிரிஞ்சுகள் இலங்கையை வந்தடையவுள்ளன.
இரண்டாவது கட்ட மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு இந்த மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என்றும் சீனத் தூதரகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
ஆப்கானிஸ்தானை
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அத உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
