அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்சினோ வைத்தியசாலை மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் அபாயநிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பிராங்கே உறுதிப்படுத்தியுள்ளார்.
Ventura Boulevard 16200 பிளாக்கில் உள்ள வைத்தியசாலைக்கு பிற்பகல் 3:50 மணிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிரேக் மேடிசன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் இரண்டு செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
சந்தேக நபர், கத்தியுடன் வைத்தியசாலையில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டதுடன், வைத்தியசாலை கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் ஏற
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக