ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் - டோன்பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது அவர் தலைமையேற்றுத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ‘ரோசியா 1’ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘டோனட்ஸ்க் மக்கள் குடியரசு’ என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியிலிருந்து குடுசோவ் படைகளை நகர்த்தி சென்றதாக அறியமுடிந்துள்ளது.
இருப்பினும் இந்த செய்தி குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை. எந்த சூழ்நிலையில் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டார் என்ற விபரங்களைத் தராமல், அவர் கொல்லப்பட்டதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்துள்ளது.

அத்துடன் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளதுடன் , குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
உலகம் முழுவதும்
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகஙஇலங்கையர் மரணம்
