ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் இராஜினாமாவைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் பதவிக் காலத்திற்கு நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள இந்த பாரதூரமான சூழ்நிலையில் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்வது சாத்தியமில்லை.

மத்திய வங்கியின் நம்பகத்தன்மையையும் தொழில் நற்பெயரையும் பேணிக் கொண்டு இந்த தருணத்தில் செயற்படும் திறன் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
