இலங்கையில் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவை – ஐ.நா
Jun10
இலங்கையில் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவை – ஐ.நா
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுக்ள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் ஹென்ன சிங்கர் ஹெம்டே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
50 வீதமான அளவு விளைச்சல் குறைவு
இலங்கையில் சுமார் 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வழமையான நெல் விளைளச்சலில் 50 வீதமான அளவு விளைச்சல் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரப் பற்றாக்குறையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதனால் உர வகைகளின் விலைகள் 60 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.