ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர அமைச்சரவையில் ராஜபக்சவினர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
அராலி, யாழ்ப்பாண கல்லூரி மைதானத்திற்கு அருகில் இடம்பெ
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
