விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளனர்.
தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த