இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன் காரணமாக, நாளைமுதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக நாளை முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபைக்கு தொடர்ந்து உலை எண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் கிடைத்தால், மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய மின்சார சபையினால் தற்போது முடியாது எனவும் தற்போது நிலக்கரி மின் உற்பத்தி மூலம் தேவையைப் பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார். நீர் மின் நிலையங்கள் மூலம் 300 மெகாவோட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறிய அவர், மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை 800 மெகாவாட் தேவைப்படுவதாகவும் நீர் மின் மூலம் அதை நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார்.
அனல் மின் நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புக்கு 1,100 மெகாவோட் வழங்குகின்ற போதும் எரிபொருள் பற்றாக்குறையால் அதுவும் பாதிக்கப்படுகிறது என்றார்.
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமைய
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி
