உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது.
ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை ஆய்வு செய்த பிறகு, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் வீடியோவில் உள்ள ஆயுதம் உண்மையில் ஹ்வாசாங்-15 என்றும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவால் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, ஏவுகணை சோதனைக்கு பின்னர் கிம் ஜோங் உன் வெளியிட்ட வீடியோ ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. தற்போது, ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில், அதை திசை திருப்பவே, கிம் ஜோங் உன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகொரியாவின் வரலாற்றில் இவ்வாறான ஏவுகணை சோதனை முன்னெடுக்கப்பட்டதில்லை எனவும், இது உலக நாடுகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும் எனவும், வடகொரிய அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
மியான்மரில் 76 ஆயுதப்படை தினம் கொண்டாடப்பட்ட அதே நேரத
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
