More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
Apr 02
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  



மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.



பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடக்கும் நிலை காணப்படுகிறது. 



தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 



பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பிய அவர்கள் போராட்டம் நடத்தினர். 



மேலும் அங்குள்ள ராணுவ காவல் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேற்கு மாகாணத்திலும் நள்ளிரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மூத்த தலைவர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்



போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்பய ராஜபக்சே அறிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை

Mar17

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின

Oct02

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Mar14

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு

Mar13

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி

Jan26

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

சு

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Feb11

ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில

Jan31

வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத

Feb05

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி

Jun18

இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு

Oct20
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (16:11 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (16:11 pm )
Testing centres