நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட வேலைத்திட்டத்தின் முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளராக கருதப்படும் திசர அனுருத்த பண்டாரவை நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்றவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்திச் செல்வதற்காக சிவில் உடையில் வீட்டுக்கு சென்றவர்கள் தாம் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து திசர அனுருத்த பண்டாரவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விசாரித்துள்ளனர். எனினும் அப்படியான எவரும் கைது செய்யப்படவில்லை பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞர்,முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இன்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்ற
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன
மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
