நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் நேற்று அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர்.
ஆனால் இன்று காலை முதல் மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவகங்கள், வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, அரச ,தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவார் எச்சரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
