மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும்.
நான் பிரார்த்தனை அல்லது எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது சொந்த மதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலின் போது நான் எதிர்த்த சக்திகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு முதலமைச்சர் துரோகம் இழைத்துவிட்டார்.
மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. தேவேந்திர ஃபட்னாவிஸை முதலமைச்சராக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது உத்தவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், அவருக்கு முதல்வராகும் எண்ணம் வந்தது. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதில் இருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சனைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள். அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்? இவ்வாறு ராஜ்தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், கொர
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் த
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின