ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம்வத்ஸர் விழா நடைபெற்றது. இதையொட்டி கரௌலி நகரில் மத ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க உடனடியாக அங்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். கரௌலி நகரம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில் கரௌலியில் வெடித்த வன்முறை குறித்து ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில டிஜிபி எம்.எல். லாதருடன் ஆலோசனை நடத்தினார்.
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையே சமூக விரோதிகளை அடையாளம் காண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட தமிழ் சினிமா
சிறப்பானவை
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45