சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். K.M. பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி ராஜா.C ஆகியோர் இருந்தனர்.
தற்போது வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட
காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச