டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் கூறியதாவது:-
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 5,500 மானியமாக வழங்கப்படும். இதில், முதல் ஆயிரம் பேருக்கு ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்.
வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ- சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ- சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானியம் முன்பு இ- கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது தற்போது, இந்த வாகனங்களை வாங்கும் நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், நகர சாலைகளில் தற்போது 45,900 இ- வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில் 36 சதவீதம் இருசக்கர வாகனங்கள். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் இ- வாகனங்களின் சதவீதம் 12 சதவீதமாக தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்