தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் இருவரும் 'நானே வருவேன்' படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. செல்வராகவன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனுஷ் இதைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் படத்திலிருந்து பல சுவாரசியமான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி
தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக்
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந