பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக பதவியேற்ற ஷபாஸ் ஷெரீப், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு இல்லாமல் அது நடக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானி புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மேலும், பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி, சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதிசெய்ய முடியும் என பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
கர்நாடக துணை முதல்-மந்திரி
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு கொரோனா தொற்றினால் பெற்றோர் 2 பேரையோ அல்லது அவர்களில் ஒ தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
