தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்து.
மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மோதல் நடைபெற்ற ஜஹாங்கீர்புரி பகுதியில் காவல்துறையினரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தட
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
