வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.
பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.
தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
