அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தவறான ஆலோசகர்களை தெரிவு செய்தமையினால் நாடு நெருக்கடி நிலைக்கு சென்றுள்ளது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்கவேண்டும்.
சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவினை வழங்க தயாராக இருந்தாலும் அவர் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.
நாட்டை எப்படி ஆள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்யும்வரை தீர்வுகளைப் பற்றி பேச மாட்டோம் என்றும் தேர்தலை நடத்துமாறும் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், நாட்டில் பாடப் புத்தகங்களைக்கூட அச்சடிக்கக் காகிதம் இல்லாத நிலையில் வாக்குசீட்டை அச்சிட காகிதம் எங்கே கிடைக்கும் எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ப
