கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வுகளை தவிர மற்ற வகுப்பினருக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு அது பின்பற்றப்பட்டது.
இதனிடையே சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ள நிலையில் தேர்வுகளும் நெருங்கியுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மே 5) தொடங்குகிறது. அதேபோல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மே 6) தொடங்க உள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம், 12ம் மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
இந்தியாவில
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
