More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்.போதனாவில் 16 பேருக்கு உளவியல் சிகிச்சை!
யாழ்.போதனாவில் 16 பேருக்கு உளவியல் சிகிச்சை!
Sep 30
யாழ்.போதனாவில் 16 பேருக்கு உளவியல் சிகிச்சை!

” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிமையாகி  அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.



ரிக்ரொக்குக்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல்  அதிக நேரம் ரிக்ரொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.



இவ்வாறான சிகிச்சைகளுக்கு பெரும்பாலும் விரும்பி சிகிச்சை பெற பலர் வைத்திய சாலைகளுக்கு செல்வதில்லை. அவ்வாறு இருக்கையில் கடந்த 09 மாதங்களில் 16 பாடசாலை மாணவர்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர் என்றால்  யாழில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவாக இருக்கலாம் என தாம் அஞ்சுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.



இதேவேளை தரம் 09ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர்.



குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.



இவ்வாறாக கையடக்க தொலைபேசிகளுக்கு மாணவர்கள் அடிமையாவதால்  நீரழிவு இ உயர் குருதி அழுத்தம், கொலஸ்ரோல், நோய் எதிர்ப்பு தன்மை குறைவடைதல், என்புத்தொகுதி சார் நோய்கள் என்பவற்றுக்கு ஆளாவார்கள்.



ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 16 தடவைகள் கண்ணை சிமிட்ட வேண்டும். இணைய விளையாட்டுக்களில் ஈடுபடும் போது பார்வை குவிப்பை ஓர் இடத்தில் செலுத்துவதனால் நிமிடத்திற்கான கண் சிமிட்டல் 8 தடவைகளை விட குறைகின்றன. இதனால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். சில வேளைகளில் பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடலாம்.



எனவே பிள்ளைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பும், கண்டிப்பும் கவன குவிவான செயற்பாடுமே பிள்ளைகளின் உடல் – உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என குழந்தை மருத்துவ நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்à

Sep23

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் à®

May04

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ

Jun12

 மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர்

மன்னார் க

Apr02

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிà®

Sep28

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாà®

Jul17

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கà

Jan11

செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்

Jun06
Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முனà

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக à®

Jun21

நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 à

Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்தà¯

Oct23

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு à®

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:17 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (08:17 am )
Testing centres