மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைத்தல், கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
