More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!
யாழில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!
Oct 01
யாழில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு!

யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.



யாழ் மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அந்த அறிக்கையில் கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன.



கொரோனா  தொற்று காரணமாக. மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிக குறைவாகும்.



யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.



கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.



இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.



எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக செப்டெம்பர் மாதம் 30ம் திகதி அரச அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடை பெற்றது.

அவ்வாறே எதிர்வரும் வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டங்கள் பிரதேச செயலர் பிரிவு வாரியாகவும் கிராமிய மட்டங்களில் கிராம சுகாதார மேம்பாட்டு குழு கூட்டங்களும் இடம்பெறும்.



இனி வரும் மாதங்களில் யாழ் மாவட்டம் பருவப்பெயர்ச்சி மழையினை அதிகம் பெறும் காலமாகும். எனவே இம்மாதங்களில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக்கூடிய டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.



எனவே நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.



இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கின்றது. இது தொடர்ச்சியாக முன்று நாட்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.



முதலாவது டெங்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை சங்கானை, கரவெட்டி, ஊர்காவற்துறை, நல்லூர், சண்டிலிப்பாய், மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில்; முன்னெடுக்கப்பட உள்ளது. அவ்வாறே எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி முதல் 14 ம் திகதி வரை சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.



இதன் போது சுகாதார உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் படையினர். பொலிஸ் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் அதிக டெங்கு ஆபத்து உள்ளதென அடையாளங் காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் மீன் பிடி துறைமுகங்கள் என்பனவற்றிற்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் பரிசோதிப்பதற்காக வருகை தருவர்.



எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும்இ வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும்.



அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக சிரமதான பணிகளை முன்னெடுக்கவும்.



மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் அவ்வாறான இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துகள் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.



டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் – என்றுள்ளது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந

May22

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார

Feb04

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என

Oct17

கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி

Feb23

கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி

Apr09

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப

Jun07

அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை

May12

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத

Feb01

மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக

Jun30

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ

Feb09

கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி

Oct06

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட

Apr08

யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை

May22

வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (04:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 13 (04:33 am )
Testing centres