அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், கனடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் புதிய தீர்மானத்திற்கான வரைவு இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அவர் தெளிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை குறித்த புதிய தீர்மானது நாட்டின் அரசியலமைப்பினை மீறுவதாக அமைந்திருப்பதாக இராஜதந்திரிகளிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய தீர்மானத்தில் இறுதி உள்ளடக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கேரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளில் அமெரிக்கா, பிரித்தானிய, கனடா உள்ளிட்ட நாடுகளின் கரிசனைகளும் ஒத்துழைப்புக்களும் தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய à
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்à®
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோசà
குருணாகலில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மà®
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுà®
நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநà®
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதà
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் à®
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருà®
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா
