மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசேட வர்த்தகமானியை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் விநியோகம் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகஸ்த்தர் சங்கத்தினர் இன்று சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னறிவித்தல் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட
