ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.
இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
