More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!
Oct 05
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு - எச்சரிக்கிறார் விஜித ஹேரத்!

சீனாவுடன்  கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினால்  நாட்டின் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய  பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.



ஆகவே அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்  போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



சில நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கிக்கொண்டு, முதியோர் தினத்தன்று வங்கிகளில் முதியோர்களின் வங்கிக் கணக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 15 வீத வட்டியை முழுமையாக இல்லாமல் செய்துள்ளனர். இது முதியோர் தினத்தில் அவர்களுக்கு வழங்கிய பரிசை போன்றே இது உள்ளது. 



அவர்களின் மருந்துகளை வழங்குவதற்குக்கூட முடியாத நிலையில் இருக்கின்றனர். கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்கிக்கொண்டு தங்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் முதியோருக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.



கடந்த காலங்களில் வங்கிகளின் வட்டி வீதத்தில் மாற்றங்களை மேற்கொண்டமையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் மத்திய தொழில்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அநீதியானது.



இதேவேளை இங்கே ஊழல் மோசடிகளை நிறுத்தினாலே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். முதலீட்டாளர்களுக்கு இங்கே அரசாங்கம் எப்படியிருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்களுக்கு முதலில் மோசடிகள் இல்லாத அரசாங்கமாக இருப்பதே முக்கியமானது.



இதேவேளை சீனாவுடன் செய்யவுள்ள வர்த்தக உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டும். அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். அதனை செய்யாது கையெழுத்திட்டால் இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களால் பல்வேறு துறைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற சந்தேகங்கள் உள்ளன. இதனால் அதில் உள்ளடக்கம் தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு கà®

Sep28

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அà

Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Sep23

நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கà¯

May17

பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி

Mar21

காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீடà¯

Mar20

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, ஒத்துழைப்பதாக தà

Feb12

இலங்கையில் வாக

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆà®

Sep27

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன

May19

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார

Apr03

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு

Aug28

கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி

Jan26

கொரோனா மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைசà

Sep21

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகிà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (11:45 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (11:45 am )
Testing centres